உலகில் அமைதியை வலியுறுத்தும் நோக்கத்தில் சைக்கிளில் உலகம் சுற்றும் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர். கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து தமது சைக்கிள் பயணத்தை தொடங்கிய 'லோக் பந்து கார்கி' என்ற அந்த நபர் இது வரை 97 நாடுகளுக்கு விஜயம் செய்து அமைதியைப் பற்றி பரப்புரை செய்திருக்கிறார். மேலும் 2017ம் ஆண்டுக்குள் 157 நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.
படைப்புகள் அணைத்தும் ஒரு இறைவனால் படைக்கப் பட்டது.... எல்லா மனிதர்களும் இறைவனின் பார்வையில் சமமானவர்களே என்கிற மனித சமூகத்துக்கு தேவையான பேருண்மையை செல்லுமிடங்களில் அவர் சொல்லிவருகிறார்.
தற்போது அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் சில நாள்கள் தங்கி பிரச்சாரம் செய்ய உள்ள அவரை தமிழகத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் யாசின் நூருல்லாஹ், ஹூசைன் பாஷா, பொறியாளர் ராஜா முஹம்மது ஆகியோர் சந்திந்து வாழ்த்து தெரிவித்தனர்.
- கொள்ளுமேடு ரிபாயி
No comments:
Post a Comment