கல்வி உதவி தேவை

மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கும் பொறியியல் படிக்கும் மாணவர் ஒருவர் தன்னுடைய கல்விக் கட்டணமான ரூபாய் 25,000-த்தை கல்லூரிக்கு கட்ட முடியாமல் படிப்பை பாதியில் விடும் நிலையில் உள்ளார். கருணை உள்ளம் கொண்ட சகோதரர்கள் அவருக்கு உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மாணவர் சாகுல் ஹமீது : 91-9500486790

அமீரக தொடர்புக்கு : 055-4161819

கமல் உண்மையான அக்கறை காட்டவில்லை - ஜெ. புகார்

சென்னை: விஸ்வரூபம் படத்தை முஸ்லீம் தலைவர்களிடம், பிரதிநிதிகளிடம் முன்பே கமல்ஹாசன் காட்டியிருந்தால் இந்த அளவுக்குப் பிரச்சினை வளர்ந்திருக்காது. ஆனால் அவர் உண்மையான அக்கறையுடன் அவர் செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

இதுகுறித்து அவர் கூறியதாவது...

விஸ்வரூபம் படம் தொடர்பாக 24 முஸ்லீம் அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் அமைப்புகளின் பிரதிநிதிகள் தலைமைச் செயலாளரிடம் புகார்களைக் கூறி மனு அளித்தனர். இதையடுத்து அதை உள்துறைச் செயலாளருக்கு தலைமைச் செயலாளர் அனுப்பிவைத்தார். படத்தத் தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் ஒரே குரலில் கோரிக்கை வைத்தனர்.

இருப்பினும் கமல்ஹாசனிடம் அரசுத் தரப்பில் பேசியுள்ளோம், உங்களது ஆட்சபனைகளைப் பரிசீலித்து தேவையானதைச் செய்யுமாறு கூறியுள்ளோம் என்று அரசுத் தரப்பில் முஸ்லீம் பிரதிநிதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதே அதைக் கமல்ஹாசன் கவனித்து சரி செய்ய முன்வந்திருந்தால் இந்த அளவுக்குப் பிரச்சினை வந்திருக்காது. ஆனால் கமல்ஹாசன் என்ன செய்தார்...

தன்னை சந்தித்த முஸ்லீம் அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் படம் போட்டுக்காட்ட ஒரு தேதி சொன்னார். அன்று அவர்கள் போனபோது பட ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் வேறு தேதியில் படம் காட்டுவதாக கூறினார்கள். ஆனால் கூறியபடி படம் காட்டப்படவில்லை. இப்படியே ஒரு மாதம் போய்விட்டது.

இந்த நிலையில் டிடிஎச்சில் படம் திரையிடுவது தொடர்பாக கமல்ஹாசனுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதன் விளைவாக படம் ஜனவரி 25ம் தேதிக்கு ரிலீஸாவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் ஜனவரி 21ம் தேதிதான் இஸ்லாமிய பிரதிநிதிகளுக்குப் படத்தைப் போட்டுக் காட்டினார் கமல்ஹாசன்.

அதன் பின்னர் 22ம் தேதி இஸ்லாமியப் பிரதிநிதிகள் அமர்ந்து படம் குறித்துப் பேசினர்.இறுதியில் படத்தைத் தடை செய்யக் கோருவது என்று முடிவெடுத்தனர். இதையடுத்து 23ம் தேதி உள்துறைச் செயலாளரை சந்தித்து மனு அளித்தனர். படத்தை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் பல்வேறு தொடர் போராட்டங்களையும் அவர்கள் அறிவித்தனர்.

இதையடுத்து 23ம்தேதி அரசு உயர் மட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. தியேட்டர்கள் முன்பு போராட்டங்கள் நடத்தப்படும், முற்றுகை நடத்தப்படும் என்பது உள்ளிட்ட போராட்ட அறிவிப்புகள் குறித்து அரசு சாதக, பாதக நிலையை அலசிப் பார்த்தது. ஒரு வேளை போராட்டம் நடந்து, வன்முறை மூண்டால் அதைக்கலைக்க, ஒடுக்க தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு என்று போக நேரிடும். அப்படி நடந்தால் குறிப்பிட்ட சமுதாயத்தினர் மீது அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி போன்றவர்களும், மீடியாக்களும் பேச ஆரம்பித்து விடுவார்கள்.

எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டே, படத்தைத் தடை செய்வது என்ற முடிவை அரசு எடுத்தது. மேலும் கமல்ஹாசனும் இறங்கி வருவதாகத் தெரியவில்லை. படத்தில் சர்ச்சைக் காட்சிகளை நீக்க அவர் முன்வரவும் இல்லை. எனவேதான் அரசு நடவடிக்கை எடுக்க நேரிட்டது.

இந்தத் தடையும் கூட 15 நாட்களுக்கு மட்டும்தான் விதிக்கப்பட்டது. மேலும் இந்தத் தடையை நீக்க உடனடியாக கமல்ஹாசன் எங்களை அணுகியிருக்கலாம். பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கலாம். ஆனால் அவர் வரவில்லை. அப்படி வந்திருந்தால், முயன்றிருந்தால் அன்றே பிரச்சினை முடிந்திருக்கும். ஆனால் அரசுக்கு எதிராக அவர் கோர்ட்டுக்குப் போய் விட்டார். அதன் பிறகு நடந்தது உங்களுக்கேத் தெரியும்.

இந்தத் தடைக்கு நான்தான் காரணம் என்று கூறுவது அபத்தமானது. சிங்கப்பூரில் இப்படம் தடை செய்யப்பட்டுள்ளது. கத்தாரில், ஐக்கியஅரபு எமிரேட்ஸில், மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.இதற்கு நான்தான் காரணமா...

கர்நாடகத்தில் வன்முறை வெடித்தது. மைசூரில் தியேட்டர் தாக்கப்பட்டது. ஆந்திராவில், கேரளாவில் போராட்டங்கள் நடந்தன. இதற்கெல்லாம் நான்தான் காரணமா...

மேலும் 24 இஸ்லாமிய அமைப்புகள் இணைந்த கூட்டமைப்பை சிறிய குழு என்று கூறுகிறார்கள். அது எப்படி சிறிய குழுவாக இருக்க முடியும். தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் அமைப்பில் ஏழரை லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் சிறிய குழுவா... என்று கேட்டார் ஜெயலலிதா.

நடுநிலை தவறும் புதிய தலைமுறை தொலைக்காட்சி!

ஒளிபரப்புத் துவங்கிய சில மாதங்களிலேயே தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்த 'புதிய தலைமுறை' தொலைக்காட்சி,
அது கடைப்பிடித்து வந்த நடுநிலையைத் தவற விட்டு விட்டதோ என்ற எண்ணம் எழும் அளவுக்கு அதன் செய்தியாளரின் ஒருதலைப் பட்சமான நடவடிக்கை இருக்கிறது.

நேற்று (29.01.2013) இரவு 10 மணிக்கு வெளியான நேரலைச் செய்திகளில், புதிய தலைமுறையின் செய்தியாளர் வெங்கட், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரான ஜவாஹிருல்லாஹ்வைத் தொடர்பு கொண்டு விஸ்வரூபம் தடை சம்பந்தமாக உரையாடினார். அப்போது அவர், ஜவாஹிருல்லாஹ்விடம், "அஜ்மல் கசாபைத் தூக்கிலிட்ட பிறகும் உங்களை நாங்கள் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கவில்லையா?" என, இந்துத்துவாவின் கைக்கூலி போல ஒரு முறைகேடான வினாவைத் தொடுத்தார்.
ஜவாஹிருல்லாஹ் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டது மே 2011 ஆம் ஆண்டு. கசாப் தூக்கிலிடப்பட்டது இரு மாதங்களுக்கு முன்னர் 2012 நவம்பர் 21 ஆம் நாள். இவ்விரண்டிற்கும் இடையே 18 மாதங்கள் இடைவெளி உள்ளது. அவர் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே, அதாவது மே 2011 க்கு முன்னரே கசாபைத் தூக்கிலிட்டுவிட்டு அரசு மறைத்து வைத்திருந்ததா? நீதிமன்ற விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே கசாபை தூக்கிலிட்டாயிற்றா?
ஒரு செய்தியாளருக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் இருக்குமா? அப்படியென்றால் வேண்டுமென்றே திசைதிருப்பும் நோக்கோடு விஷமத்தனமாகத்தானே அவர் ஜவாஹிருல்லாஹ்விடம் கேட்டிருக்கிறார்.

பாகிஸ்தான் தீவிரவாதியாக மும்பை தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அஜ்மல் கசாபையும், தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினரான ஜவாஹிருல்லாஹ்வையும் இணைத்துக் கேட்பதன் மூலம் புதிய தலைமுறை தனது பார்வையாளர்களிடம் மிகவும் விஷமத்தனமான ஒரு கருத்தினை முன்வைப்பதை அறிந்துக் கொள்ள முடிகிறது. இந்திய ஜனநாயக அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினராக உள்ள ஒருவரை, தீவிரவாதச் செயல் புரிந்தோருடன் இணைத்துச் சொல்வதன் மூலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் முஸ்லிமாக இருப்பதால் எங்களின் சந்தேகப்பார்வை உங்கள் மீது இருந்து கொண்டே இருக்கும் எனப் புதிய தலைமுறை நேரடியாகத் தெரிவிக்கிறது.

அதுபோல், விஸ்வரூபம் திரைப்படம் தடை சம்பந்தமாக முஸ்லிம் அமைப்புகளைச் சார்ந்தோர் தலைமை நீதிபதியைச் சந்திக்க அவரது இல்லம் செல்கின்றனர். இதனைச் செய்தியாளர், "முஸ்லிம் அமைப்புகள் தலைமை நீதிபதியின் இல்லம் நோக்கிச் செல்கிறார்கள்" என்று கூறும்போது அவரை இடைமறித்து, செய்தி வாசிப்பவர் "முற்றுகை இடப் போகிறார்களா" எனக் கேட்டுக் கொண்டே இணைப்பினைத் துண்டிக்கிறார்.

இவ்வாறே சில தினங்களுக்கு முன் ஒளிபரப்பான "பல கோணம்" என்ற நிகழ்ச்சியிலும், விஸ்வரூபம் சம்பந்தமாகத் திரைப்பட இயக்குனர் செல்வமணி கூறிய கருத்திற்கு, ஜவாஹிருல்லாஹ் மறுப்புத் தெரிவிக்கும்போது, ஒலியினை துண்டித்தனர்.

இவ்வாறான செயல்களினால் புதிய தலைமுறை தொலைக்காட்சி நடுநிலை தவறி, ஒரு சார்பாகச் செயல்படுகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. ஏனெனில் இந்தத் தொலைக்காட்சியின் நிறுவனர் பச்சமுத்து, வரும் தேர்தலில் பீ ஜே பி யுடன் கூட்டு வைக்க இருப்பதாகத் தெரிவித்திருந்தார். அதனால் பீ ஜே பியைக் குளிர வைக்கும் விதமாகவே அத்தொலைக்காட்சி இப்படி நடுநிலை தவறிச் செயல்படுகிறது என்றே தோன்றுகிறது.

-
முஹம்மது, துபாய்.

Thanks : inneram.com

விஸ்வரூபம்: தடை நீங்கி விட்டால் முஸ்லிம்களுக்கு இழுக்கா?

ஒற்றுமையே ஒரு சமூகத்தின் அத்திவாரம், ஜனநாயகம் என்பது எல்லோருக்கும் பொதுவானது.

மனித உரிமை என்பது அனைவருக்கும் பொதுவானதும் அனைவராலும் மதிக்கப்பட வேண்டியதுமான விடயமாகும். இஸ்லாம் இதை வலியுறுத்திப் போதித்திருக்கிறது, அண்ணலாரின் வாழ்க்கை முறை அதை நமக்கு மிக அழகாக எடுத்தியம்பியிருக்கிறது.

இக்கட்டான கால கட்டங்களை மனித உயிர், உடமைகளின் சேதங்களில்லாமல் எவ்வாறெல்லாம் அண்ணலார் சமாளித்தார் என்பது மாத்திரமன்றி சமூக ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கூட எந்த அளவு பேணிப்பாதுகாத்திருக்கிறார் என்பது ஒவ்வொரு முஸ்லிமும் ஏறத்தாழ அறிந்த விடயமே.

தென்னிந்தியாவில் தயாராகும் தமிழ் சினிமாக்களில் பெரும்பாலும் தீவிர வாதிகள் இஸ்லாமியப் பெயர்களைக் கொண்டவர்களாகவே வரும் வரை அதை ஒரு பொருட்டாக எடுக்காத முஸ்லிம சமூகம் (உலக சினிமாவும் அதைத்தான் செய்கிறது) ஒரு சமூகத்தின் வாழ்வியலை தவறான முறையில் சித்தரிக்கச் சென்றதாகக் கூறப்படும் விஸ்வரூபம் எனும் திரைப்படத்தைத் தடை செய்யக் கோரியிருக்கிறது.

பேச்சு சுதந்திரத்தின் எல்லைகளுக்கு அப்பால் குறிப்பிட்ட ஒரு சமூகம் மீதான தவறான பார்வையை ஏற்படுத்துவதன் மூலம் அச்சமூகத்தின் மீதான நம்பிக்கை மற்றும் கெளரவத்துக்கும் பங்கம் விளைவிக்க முடியும் என்பதற்கு உலகில் கடந்த காலங்களிலும் பல உதாரணங்களை நாம் பார்த்திருக்கிறோம். அது மாத்திரமன்றி, சினிமா எனும் ஊடகத்தின் தாக்கம் நவீன உலகில் வலுவாக இருப்பதனால் அங்கு சொல்லப்படும் ஒவ்வொரு சேதியும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டே ஆக வேண்டும்.

விஸ்வரூபம் திரைப்படத்தைப் பொறுத்தவரை அதைப் பார்வையிட்ட முஸ்லிம் தலைவர்கள் இது முற்று முழுதாக இஸ்லாத்தையும் இஸ்லாமிய சமூகத்தையும் திருமறையையும் தவறான முறையில் சித்தரிக்கிறது எனும் குற்றச்சாட்டினை முன்வைத்திருக்கிறார்கள், எனினும் முஸ்லிம் சமூகத்தின் அபிமானி தான் எனக் கூறும் அதன் தயாரிப்பாளர், பிரதான நடிகர் கமல்ஹாசன் எந்த வகையில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் நான் தவறாகச் சித்தரிக்கிறேன் என்று இன்னும் கேள்வி கேட்கிறார்.

இது அவரது அறியாமை, அவரது பார்வையின் கோணம் என்று பல் தரப்பட்ட விடயங்கள் உள்ளடங்கிய விடயமாக இருக்கலாம். ஆகக்குறைந்தது திரைப்படத்தினைப் பார்வையிட்ட முஸ்லிம் தலைவர்கள் அந்த இடத்திலேயே இது குறித்த தங்கள் அதிருப்தியையும் குறிப்பிட்ட காட்சிகளையும் பற்றிய விளக்கத்தினை "கலந்துரையாடி இருப்பார்கள்" எனும் நம்பிக்கையில், கமலஹாசனுக்கு அதற்கு மேலும் புரியவில்லையா? என்பதே சாதாரண முஸ்லிமின் கேள்வியாக இருக்கிறது. எனவே, அவரும் தன் பேரெதிர்ப்பைக் காட்டுகிறார்.

இப்போது இரு வேறு கருத்துக்கள் உள்ள முரண்பாடான விடயம் என்பதால், இவ்விடயம் நீதி மன்றைச் சென்றடைந்து விட்டது, இனி அங்கு வழங்கப்படுவதே நீதியாகவும், அந்த நீதியில் முரண்பாடிருந்தால் மேன்முறையீடாகவும் இரு தரப்பும் தம் நியாயங்களை வைக்கலாம், அது தான் ஜனநாயகமும் கூட.

திரையரங்குகள் நோக்கிய கண்டனப்பேரணி வரை மனித உரிமைக்குள் அடங்கும் அதே வேளை, வன்முறை விஸ்வரூபம் சித்தரித்ததை நியாயப்படுத்தி விடும் என்பதை முஸ்லிம் சமூகம் மனதிற் கொள்ளல் நலம்.

நம் சமூகம் மீதான தவறான பார்வையைக் கண்டித்துப் பயனில்லாததால் நம் எதிர்ப்பைக் காட்டிவிட்டோம், நடு நிலையாளர்களைப் பொறுத்தவரை இரு சாராரின் வாதங்களின் தாக்கத்தோடு திரைப்படத்தைப் பார்ப்பார்கள், இஸ்லாமிய எதிர்ப்பாளர்களோ அவர்கள் எதிர்பார்க்கும் அளவு செய்தியிருந்தால் திருப்தியுடன் வெளி வருவார்கள், நியாயத்தை விரும்புபவர்கள் திரைப்படம் அத்து மீறியிருப்பதைச் சுட்டிக்காட்டுவார்கள்.

எது எப்படியோ, திரைப்படம் மூலம் கமலஹாசன் சொல்ல நினைத்ததை விட உக்கிரமான, ஆணித்தரமான செய்தியை முஸ்லிம் சமூகம் சொல்லி விட்டது, எனவே, திரைக் கதையின் நியாயங்கள் இனி நம்பப்படும் விடயங்களாக இல்லாமல் அலசப்படும் விடயமாகவும், வாத விவாதத்திற்கு உட்படப்போகும் விடயமாகவும் இருக்கும். இதற்காகப் பாடு பட்ட அனைத்து முஸ்லிம்களுக்கும் இது ஒரு வெற்றியே!

எனவே, அதையும் தாண்டி இத்திரைப்படம் மேலும் சில தணிக்கைகளுக்குட்பட்டு வெளி வந்தால் கூட அதை முஸ்லிம்கள் இழுக்காகப் பார்க்கும் தேவையில்லை, ஏனெனில் மீண்டும் தேவைப்பட்டால் ஜனநாயக ரீதியாக, கருத்தைக் கருத்தால் தோற்கடிக்க முடியும் என்பதற்கு விஸ்வரூபம் எடுத்து நிற்கும் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை இன்றைய நிலையில் சாட்சியாக இருக்கிறது.

தன் நடிப்பின் மைல் கல் என்று அவர் நினைத்த குணா போன்ற திரைப்படங்கள் இந்திய ரசிகர்களால் நிராகரிக்கப்பட்ட போது கூட இலங்கையில் பெரும் வரவேற்பைப் பெற்று ஓடியது, அப்பேற்பட்ட ரசிகர்களையும் சேர்த்தே கமலஹாசன் இழந்திருக்கிறார் எனும் போது ஒரு சமூகத்தின் மீதான பார்வை சொல்லப்படும் போது இன்னும் எவ்வளவு கவனம் எடுக்கப்பட வேண்டும் எனும் செய்தி படைப்பாளிகளையும் சென்றடைந்திருக்கிறது, இதுவும் விஸ்வரூபமெடுத்த முஸ்லிம்களின் வெற்றியே !

எடுத்த எடுப்பில் சுதந்திரம் எனும் பெயரில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நம்பிக்கொண்டிருந்த பல பேர் இன்று ஆடிப்போயிருக்கிறார்கள், ஆனால் அந்த ஆட்டம் முஸ்லிம் சமூகத்திடம் ஒற்றுமையிருக்கும் வரைதான் என்பது உணரப்பட வேண்டும், ஒற்றுமையுடன் கலந்த ஜனநாயகப் போராட்ட சக்தியாக முஸ்லிம்கள் மாறுவது காலத்தின் கட்டாயம், எனவே பொறுமையுடன் தார்மீகப் பொறுப்புடன் சமூகத்துக்கெதிரான வன்முறையைக் கையாள்வது மாத்திரமன்றி மாற்று சமூகங்கள் இந்த ஒற்றுமையை மெச்சி, நம் நன்னடத்தையைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் வகையிலும் வழி நடத்தப்பட வேண்டும் என்பதும் காலத்தின் தேவை.

இதை உணர்ந்து, இந்தியஇலங்கை முஸ்லிம் சமூகம் இவ்விடயத்தைக் கையாள வேண்டும் !

Regards,

H.Jamal Mohamed
Seychelles
Victoria
Mahe, Seychelles
Indian Ocean Island Chapter