சச்சார் அறிக்கையும் அரசுகள் விடும் சரடுகளும்! - டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஐ.பீ.எஸ்

கிராமப் புறங்களில் பொய் வாக்குறுதி சொல்லி ஏமாற்றும் வார்த்தைகளுக்கு சரடு விடுவதாக சொல்லுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அதனையே செய்து கொண்டிருக்கிறது பல்வேறு அரசுகள் என்ற ஆதங்கத்தில் எழுதப் பட்டது இந்தக் கட்டுரை.

16.3.2013
அன்று சென்னை பாரதி தாசன் சாலையில் அமைந்திருக்கும் பிரின்ஸ்டன் கல்லூரி வளாகத்தில் நீதிபதி சச்சார் குழு அறிவித்த அறிக்கைக்குப் பின்பு ஆறு வருடம் என்ற தலைப்பில் ஒருக் கருத்தரங்கம் நடை பெற்றது. அதில் டெல்லியிலிருந்து வந்த சமூதாயப் பிரமுகர்களும், பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் அப்துர் ரஹ்மானும், சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் ஜவாஹிருல்லாஹ் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
அப்போது என்னுடைய கருத்தினை கீழ்க்கண்டவாறு பதிவு செய்தேன். அவற்றினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

மத்தியில் 2004 ஆம் ஆண்டு அமைந்த யு.பி. அரசு இந்திய முஸ்லிம்கள் நிலைப் பற்றி அறிவதிற்காக நீதிபதி சச்சார் தலைமையில் ஏழு உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு 2005 ஆம் வருடம் நியமிக்கப் பட்டது. அதன் அறிக்கையினை 30.11.2006 இல் பாராளு மன்றத்தில் வைக்கப் பட்டது.

அதன் இரண்டு முக்கிய கண்டு பிடிப்பு ;
1)
முஸ்லிம்கள் நிலை இந்தியாவில் வாழும் தலித் மக்களை விடவும், மலைஜாதியினரை விடவும் பின் தங்கி யுள்ளனர்.
2)
இந்திய நாட்டில் முஸ்லிம்கள் ஜனத்தொகை 14 சதவீதமானாலும் அரசு வேளைகளில் வெறும் இரண்டரை சதவீதமே உள்ளனர்.

சச்சார் அறிக்கைக்குப் பின்பு முஸ்லிம்களின் சமூதாய பொருளாதார கல்வி போன்றவற்றில் இன்றைய நிலை பற்றி தெரிந்து கொள்ள நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமயில் ஒரு குழு 2006 ஆம் ஆண்டு அமைக்கப் பட்டது. அந்தக் குழு தன் அறிக்கையினை 2007 ஆம் ஆண்டு மே மாதம் சமர்ப்பித்தது. அதனை உடனே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. ஆனால் பாராளு மன்ற உறுப்பினர்கள் கோசமிட்டதினைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. அதனுடைய முக்கிய சாராம்சம் கீழ்வருமாறு:

1)
இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் மைனாரிட்டி இல்லாத கல்வி நிறுவனங்களில் ஒதுக்க வேண்டும்.

2)
கிராமப் புற வேலை வாய்ப்புத் திட்டத்தில் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

3)
முஸ்லிம்களுக்கு மத்திய மாநில வேலை வாய்ப்புகளில் 10 சதவீத ஒதுக்கீடு ஏற்ப்படுத்த வேண்டும்.

மத்திய அரசு இரண்டு குழுக்களையும் அமைத்து அறிக்கைப் பெற்ற பின்பு முதலில் சச்சார் அறிக்கையினை நிறைவேற்ற பிரதமரின் 15 அம்ச அறிக்கையினை தாரை தப்பட்டையுடன் பரபரப்பாக வெளியிட்டது. 

ஆனால் மேற்கு வங்கத்தில் 17.3.2013 அன்று முஸ்லிம்கள் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் யு.பி. சேர்மன் சோனியா காந்தியும் பிரதமரும் கலந்து கொண்டனர்.

அப்போது சோனியா காந்தி பிரதமரிடம் 15 அம்ச திட்ட நிறைவுகளை பிரதமரே பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளது எதனைக் காட்டுகின்றது என்றால், முஸ்லிம்களுக்கு திட்ட பலன் சரியாகப் போய் சேரவில்லை என்ற அதிருப்தியில் இருப்பதினை என்பதினை காட்டுவது தானே! முஸ்லிம்கள் அதிர்ப்த்தி என்னன்ன என்பதினைக் கீழ்க் கண்டவாறு பார்க்கலாம்:

1)
சச்சார் அறிக்கையினைத் தான் ஆறு வருடமாக ஆய்வு நடக்கின்றதே தவிர ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரையினை நிறைவேற்ற ஒரு சதவீத நடவடிக்கை கூட எடுக்க வில்லை என்று ஒரு உதாரணத்தைக் கொண்டு விளக்கலாம் என நினைக்கின்றேன்.

17.3.2013
அன்று உத்திரப் பிரதேசம் லக்னோவில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய வெளிவிகார மந்திரி சல்மான் குர்சித், முஸ்லிம்களுக்கு நாலு சதவீத ஒதுக்கீடு வழங்க ஆய்வு மேற்கொள்ளப் பட்டு வருகிறது என்று கூறியிருக்கிறார். ஏனென்றால் மக்களவைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என்ற நிலை இருப்பதால்.

.பி.யில் முஸ்லிம்கள் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த சமதா கட்சி இட ஒதுக்கீடு மற்றும் பல்வேறு நலன்கள் உறுதி தேர்தல் நேரத்தில் கொடுத்து இருந்தாலும் அதனை நிறைவேற்றவில்லை என்று டெல்லி ஜும்மா மஸ்ஜித் இமாம் புஹாரி தனது ஆதரவினை விளக்கி யுள்ளார். அது போன்ற நிலைதான் மற்ற மாநில அரசுகளும்.

2)
சச்சார் அறிக்கையில் அல்லது மிஸ்ரா அறிக்கையில் அவர்களுடைய பரிந்துரைகளை நிறைவேற்ற எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்ற குறிப்பீடு இல்லை.

3)
மதக் கலவரத்தில் பாதிக்கப் பட்டோர் புனர் வாழ்விற்கு என்ன நீதி வழங்குவது என்று சொல்லவில்லை. உதாரணமாக குஜராத்திலோ அல்லது மகாராஸ்ட்ராவில் துளியில் நடந்த சம்பவங்கள் அல்லது பெங்களூர் டி.ஆர்.டி. இன்ஜிநீர் அஹமத் மிஸ்ராவினை அநியாயமாக பதவி நீக்கம் செய்தது போன்ற சமூக அநீதிகளுக்கு என்ன பரிகாரம் என்று சொல்ல வில்லை.

4)
வீடு அல்லது நிலம் இல்லா முஸ்லிம்களுக்கு வீட்டுப் பட்டாவோ அல்லது நிலப் பட்டவோ வழங்க என்ன நடவடிக்கை என்று கூறவில்லை.

5)
மண்டல் கமிசன் சிபாரிசு செய்த 27 சதவீத .பி.சி. கோட்டாவில் முஸ்லிம்களுக்கு என்ன பயன் என்று எடுத்துச் சொல்லவில்லை. அதனை கண்காணிக்க எந்த அரசு அமைப்பையும் நியமனம் செய்யவில்லை.

6)
அரசால் எச்.ஆர்.டி. மாநில மந்திரி எம்.. பாத்மி அவர்கள் தலைமையில் அமைக்கப் பட்ட குழு தயாரித்த செயல் படுத்தும் திட்டங்களான முதியோர் கல்வி, தொழில் கல்வி, மதரசாவினை நவீனப் படுத்தல் மற்றும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா போன்ற திட்டங்களை முஸ்லிம்கள் அதிகமாக வாழும் 90 மாவட்டங்களில் அமல் நடத்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு இது வரைரூபாய் 34 ஆயிரம் கோடி ஒடுக்கப் பட்டாலும் இது வரை ரூபாய் 900 கோடி தான் செலவு செய்யப் பட்டுள்ளது. மற்ற பட்ஜெட் மாநிலங்களால் திரும்ப ஒப்படைக்கப் பட்டுள்ளது. ஏன் அவ்வாறு ஒப்படைக்கப் பட்டுள்ளது என்றால் அந்த பட்ஜெட் சரியாக முஸ்லிம்கள் பயன்பாடுகளுக்குப் போய் சேருகிறதா என்று கவனிக்க ஒரு அரசு அமைப்பு இல்லை.அதுவும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஒரு மாவட்டம் கூட அந்த எல்கைக்குள் வரவில்லை. அதனை மத்திய சிறுபான்மை மந்திரி மதிற்பு மிகு ரஹ்மான் கான் அவர்களுக்கு 26.1.2013 அன்று சென்னை எஸ்.. .டி யில் நடந்த கூட்டத்தில் சுட்டிக் காட்டினேன்.அதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர். வருங்காலத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாவட்டத்திற்குப் பதிலாக முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ப்ளாக் என்று திருத்தம் கொடு வரப்படும் என்றார்கள்.

7)
பாத்மி குழு பதினோராவது ஐந்து வருட நிதி நிலை அறிக்கையில் பொருளாதார முன்னேற்றத்திற்காக ரூபாய் 5434 கோடிகள் பரிந்துரை செய்தது. ஆனால் மத்திய நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் 28.2.2013 அன்று சமர்ப்பித்த நிதி அறிக்கையில் வெறும் ரூபாய் 3511 கோடிகள் தான் ஒதுக்கப் பட்டது என்று நினைக்கும்போது முஸ்லிம்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் செயலாக உங்களுக்குத் தெரியவில்லையா?

8)
இதிலிருந்து உங்களுக்குத் தெரிந்து இருக்கும் மத்திய அரசோ அல்லது மாநில அரசோ ஏழை முஸ்லிம்களுக்கு ஆதரவாகவோ அல்லது மைனாரிட்டி முஸ்லிம்களுக்கு ஆதரவாகவோ எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதினை.

ஒரு நாடு சமூக நீதி கொண்ட நாடாக இருக்க வேண்டுமென்றால் மக்களின் தேவை உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .புதிதாக 18.3.2013 அன்று பதவி ஏற்றிருக்கும் போப் பிரான்சிஸ் கூட ஏழ்மையான மக்களைக் காப்பது ஒரு சமூகத்தின் கடமை என்று கூறியுள்ளார். அவ்வாறு இல்லை என்றால் அந்த மக்கள் அழிவதினைத் தவிர வேறு வழி இல்லை என்று கூறியுள்ளார். உச்ச நீதி மன்றம் கூட வறுமைக் கோட்டிற்க்கு கீழ் உள்ளவர்கள் பட்டினிச் சாவிலிருந்து காப்பாற்ற இலவச உணவு தருவது அரசின் கடமை என்று கூறியுள்ளது.

இந்திய தேசத்தில் 80 சதவீதத்திற்கு மேல் வாழும் மற்றும் ஆட்சி செய்யும் ஹிந்துக்கள் மெஜாரிட்டி அரசில் வாழும் 15 சதவீத மைனாரிட்டிகள் சமூக நீதியுடன் மானத்தோடு வாழ மைனாரிட்டி முஸ்லிம்கள் பொருளாதார,கல்வி, வேலை வாய்ப்பு சமூகத்தில் சமமாக வாழ மத்திய அரசும் மாநில அரசும் வழி வகுக்க இனியாவது இஸ்லாமிய அமைப்புகள் ஒருங்கிணைந்து தங்களுடைய உரிமைக்காக குரல் எடுக்குமா என்று காலம்தான் பதில் சொல்லவேண்டும்!

 

 

No comments:

Post a Comment